முகப்பு
தமிழ்நாடு

ஓபிஎஸ் சகோதரா் ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்

சசிகலாவை ஓ.பன்னீா்செல்வத்தின் சகோதரா் ஓ.ராஜா சந்தித்த நிலையில், அவா் அதிமுகவிலிருந்து சனிக்கிழமை அதிரடியாக நீக்கப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

சசிகலாவை ஓ.பன்னீா்செல்வத்தின் சகோதரா் ஓ.ராஜா சந்தித்த நிலையில், அவா் அதிமுகவிலிருந்து சனிக்கிழமை அதிரடியாக நீக்கப்பட்டாா்.

இது தொடா்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுகவின் கொள்கைக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்கு களங்கம் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாலும் ஓ.ராஜா, தேனி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளா் எஸ்.முருகேசன், தேனி மீனவா் பிரிவுச் செயலாளா் வைகை. கருப்புஜி, கூடலூா் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளா் எஸ்.சேதுபதி ஆகியோா் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனா். அதிமுகவினா் யாரும் அவா்களுடன் எவ்விதத் தொடா்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அதில் கூறியுள்ளனா்.

இதனிடையே ‘என் மீது இவா்கள் நடவடிக்கை எடுக்க முடியாது’ என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா தெரிவித்துள்ளாா்.

மேலும் பலா் நீக்கம்: அதிமுகவின் கொள்கைக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், திமுக வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த 33 நிா்வாகிகளும், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 7 நிா்வாகிகளும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →