தமிழ்நாடு

பார்களை மூடும் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் மேல்முறையீடு

DIN

பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் மேல்முறையீடு செய்துள்ளது. 
ஆறு மாதங்களுக்குள், தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைக்கு சொந்தமான பார்களை மூட டாஸ்மாக்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. 2019-21 ஆண்டுக்கான பார் உரிமம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  

அதுமட்டுமின்றி, சில்லறை விற்பனை கடைகளிலிருந்து வாங்கப்படும் மதுவை வீட்டிலேயே அல்லது வேறு தனியார் இடத்திலேயோ தான் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 
இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி டாஸ்மாக் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுவில் டாஸ்மாக் கடை அருகே பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு அதிகாரம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT