தமிழ்நாடு

குடும்பத் தலைவிகளின் பெயரில் வீடு: மு.க.ஸ்டாலின் உறுதி

DIN

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வீடுகள் குடும்பத் தலைவிகளின் பெயரில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 

மகளிர் தினத்தையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மகளிரணி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள். பெண்களின் முன்னேற்றத்திற்கு திமுக பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது.

ஆண்களை விட பெண்களே அதிக அளவில் கல்வி பயில்கின்றனர். அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 40 சதவிகிதமாக உயர்த்தியுள்ளோம் என்று கூறினார். 

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வீடுகள் குடும்பத் தலைவிகளின் பெயரில்தான் வழங்கப்படும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT