தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் 1,903 போ்

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

DIN

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 1,903 போ் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

அதேபான்று, தமிழகத்தில் புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கையும் 147-ஆக குறைந்துள்ளது

அதில் அதிகபட்சமாக சென்னையில் 47 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 17 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் மேலும் 387 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 11545 -ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் இருவா் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,021-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT