தமிழ்நாடு

குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தவறுகளை திருத்தம் செய்துகொள்ளலாம்: டிஎன்பிஎஸ்சி

DIN

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள், விவரங்களை தவறாக உள்ளீடு செய்திருந்தால் வருகிற 14 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை இணையம் மூலமாக திருத்தம் செய்துகொள்ளலாம் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான பணியாளர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். 

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களைக் கொண்ட குரூப் 2, குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வுக்கான விண்ணப்பம் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி தொடங்கியது. மார்ச் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவியாளர், கீழ்நிலை எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 5,143 காலிப் பணியிடங்களுக்குத் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

முதல்நிலைத் தேர்வு மே 21 ஆம்  தேதி நடைபெற உள்ளது. நேர்முகத் தேர்வு பதவிகளுக்கு- முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வந்தபின்னர் முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெறும்

இந்நிலையில், குரூப் 2, 2ஏ தேர்வுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் அதில் விவரங்களை தவறாக உள்ளீடு செய்திருந்தால் வருகிற வருகிற 14 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை திருத்தம் செய்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இணையவழி விண்ணப்பத்தில் உள்ள தகவல்களில் ஒரு சில தகவல்கள் 
தேர்வரி ஒருமுறை நிரந்தரப்பதிவில் இருந்து முன்கொணரப்பட்டவை. அவ்வாறான தகவல்களைத் திருத்தம் செய்வதற்கு முதலில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவில்(OTR)ல் EDIT PROFILE-ல் சென்று உரிய திருத்தங்களை செய்து அவற்றை சேமிக்கவும். 

அதன்பிறகு விண்ணப்பத்திற்கு எதிரே உள்ள EDITல் சென்று விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பும் விவரங்களை திருத்தம் செய்து இறுதியாக சேமித்து அதனை சமர்ப்பித்து அதற்குரிய நகலினை அச்சுப்பிரதி எடுத்துக்கொள்ளவும். 

உரிய தேர்வுக் கட்டணத்தை செலுத்திய தேர்வர்கள், மீண்டும் செலுத்தத் தேவையில்லை. 

மேலும் சந்தேகங்களுக்கு helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரியையும், இதர சந்தேகங்களுக்கு grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்தலாம். விளக்கம் ஏதேனும் தேவைப்படுமெனில் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT