தமிழ்நாடு

பணியின்போது அரசு ஊழியர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்துவது நல்லதல்ல: உயர் நீதிமன்ற மதுரை கிளை

DIN

மதுரை: பணி நேரத்தில், அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்லிடப்பேசியை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பணியின்போது செல்லிடப்பேசியில் விடியோ எடுத்த அரசு ஊழியரை பணியிடை நீக்கம் செய்தது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், அலுவலக நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்லிடப்பேசியில் பேசுவது மற்றும் விடியோ எடுப்பது நல்ல நடவடிக்கை அல்ல.

பணி நேரத்தில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவது தொடர்பாக அரசு ஊழியர் விதிப்படி, மருத்துவத் துறை செயலாளர் உரிய வழிகாட்டுதல்களை உருவாக்கி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருப்பதோடு, உயர் நீதிமன்றக் கிளை உத்தரவை 4 வாரங்களுக்குள் முடிவுக்கவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அலுவலக பயன்பாட்டுக்கு  என அரசு ஊழியர்கள் தனி செல்லிடப்பேசி அல்லது தொலைபேசி பயன்படுத்த நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT