ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 
தமிழ்நாடு

ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

2022-23ஆம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.

DIN


2022-23ஆம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.

இன்று காலை தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதும், நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றத் தொடங்கினார்.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவையில் பேச அனுமதி கேட்டார். அதற்கு அவைத் தலைவர் அப்பாவு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதை கண்டித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழக பட்ஜெட்டில் கல்விக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இல்லை. மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவது குறித்தும் அறிவிக்கப்படவில்லை. அத்திட்டம் தொடங்குவது தள்ளிப்போடப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழக பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றமே. திமுக அரசு தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கை ஒரு வெத்துவேட்டு என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், கரோனா தொற்று பரவல் அதிகரித்ததால்தான் அதிமுக ஆட்சியில் வருவாய் குறைந்திருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் வருமானம் அதிகரித்த நிலையிலும் அதிக கடன் வாங்கியுள்ளனர். கரோனா காலத்தில் அரசுக்கு வருவாயே கிடைக்கவில்லை.  ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததுமே, வருவாய் வழிகள் இயல்பு நிலைக்கு திரும்பின. வருவாய் அதிகரித்துள்ள நிலையில், கடன் குறைந்திருக்க வேண்டும். ஆனால் குறையவில்லை எனறு குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை இன்று குறைந்தது!

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறைச்சாலை நூலகத்தில் பணி! நாளுக்கு ரூ. 525 ஊதியம்!

தூத்துக்குடி உள்பட 22 இடங்களில் என்ஐஏ சோதனை

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி கொலை! ராணுவ வீரர் காயம்!

SCROLL FOR NEXT