முகப்பு
தமிழ்நாடு

பிரதமரின் வீட்டு வசதித் திட்டப் பணிகளுக்கு ரூ.4,848 கோடி

பிரதமரின் வீட்டு வசதித் திட்டப் பணிகளை விரைவுபடுத்திட ரூ.4,848 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
பகிர்:

பிரதமரின் வீட்டு வசதித் திட்டப் பணிகளை விரைவுபடுத்திட ரூ.4,848 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ், 2016-2020- ஆம் ஆண்டுகளில் ஒப்பளிக்கப்பட்ட 1 லட்சத்து 77,922 வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்திட, மேற்கூரை அமைப்பதற்காக கூடுதலாக வழங்கப்படும் ரூ.70,000 உள்பட ஆண்டுதோறும் வீடு ஒன்றுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 68,000 மாநில அரசு வழங்கி வருகிறது. 2021-22-ஆம் ஆண்டில் 2 லட்சத்து 30,788 புதிய வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.4,848 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமத்துவபுரங்களை சீரமைக்க...: சமத்துவம் தழைக்கும் ஏற்றத்தாழ்வுகளற்ற தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், முன்னாள் முதல்வா் கருணாநிதியால் பெரியாா் நினைவு சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன. முதற்கட்டமாக, கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி புறக்கணிக்கப்பட்ட 149 சமத்துவபுரங்கள் ரூ.190 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →