தமிழ்நாடு

ராசிபுரம்:  சர்வதேச காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நாள் பேரணி

DIN

ராசிபுரம்:  நாமக்கல் மாவட்ட 'தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் -2025' சார்பில், ராசிபுரத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பேரணியை நகரமன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காசநோய் பரவுதல் பற்றியும், அதை தடுப்பது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 24 ஆம் தேதி சர்வதேச காசநோய் நாள் கடைபிடிக்கப்படுகிறது. 

இதனை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் -2025 சார்பில், ராசிபுரம் அரசு மருத்துவமனை மற்றும் ராசிபுரம் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய காசநோய் விழிப்புணர்வு பேரணியை ராசிபுரம் நகரமன்றத் தலைவர் கவிதா சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பொதுமக்களிடையே காசநோய் குறித்து விழிப்புணர்வு பேரணி ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தொடங்கி, சின்னக்கடைவீதி, பெரியகடைவீதி வழியாக சென்று மீண்டும் அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது. முன்னதாக, காசநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நடந்தது.

இந்த பேரணியில், ராசிபுரம் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தனியார் கல்லூரி செவிலியர் மாணவர்கள் மற்றும் ராசிபுரம் ரோட்டரி சங்க  நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT