கோப்புப்படம் 
தமிழ்நாடு

ரூ. 1000 ஆகப் போகிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ரூ. 50 உயர்வு

வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் (கேஸ் சிலிண்டர்) விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

DIN

வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் (கேஸ் சிலிண்டர்) விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 அதிகரித்துள்ளது. தற்போதைய விற்பனை விலை ரூ. 967!

நாட்டில் 137 நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.16-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 77 காசுகள் உயர்ந்து ரூ. 92.19-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தபோதிலும், பெட்ரோல்,  டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் 137 நாள்களுக்கு பிறகுப் பெட்ரோல் மற்றும் டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

கடந்த மாதங்களில் நாட்டில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்தது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

SCROLL FOR NEXT