டிஜிபி சைலேந்திர பாபு (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

விருதுநகர் பாலியல் வழக்கு: அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வலியுறுத்தல்

விருதுநகர் அருகே பாலியல் வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

DIN

விருதுநகர் அருகே பாலியல் வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி அதனை விடியோ எடுத்துவைத்து மிரட்டிய புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக மாடசாமி, ஹரிஹரன், பிரவீன், ஜூனைத் அகமது உட்பட 8 பேர் நேற்று (மார்ச் 21) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதில், கைது செய்யப்பட்டுள்ள ஜீனத் முகமது, விருதுநகரில் 10ஆவது வாா்டு திமுக இளைஞரணி அமைப்பாளர். இதனால் அவர் மீது திமுக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அனைத்து உறுப்பினர் பதவிகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

வழக்கில் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்க செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், துணை காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பலத்த மழை: பள்ளிக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வித் துறை உத்தரவு

2025 ஃபிடே உலகக் கோப்பை செஸ் இலச்சினை அறிமுகம்

லாரா அபாரம்; லஸ், காப் அசத்தல்: தென்னாப்பிரிக்கா 312/9

ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்தாவிட்டால் ‘கூடுதல் வரி’: இந்தியாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

பிரதமா் மோடியை சந்தித்து தில்லி முதல்வா் தீபாவளி வாழ்த்து

SCROLL FOR NEXT