ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யப்பட்டு அகற்றப்பட்டன. 
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நீர்நிலை ஓடை பகுதியில் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் பகுதியில் உள்ள நீர் நிலை ஓடைகளில் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகளை மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் பகுதியில் உள்ள நீர் நிலை ஓடைகளில் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகளை மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நீர்நிலை ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். அதனடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் பகுதியிலுள்ள நீர்நிலை ஓடை பகுதியில் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகளை கிராம நிர்வாக அதிகாரி மற்றும் சர்வேயர் ஆகியோரை கொண்டு நீர் நிலை பகுதிகளை அளவீடு செய்து விவசாய ஆக்கிரமிப்பை அகற்றினர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ராமசுப்ரமணியன், மம்சாபுரம் வருவாய் ஆய்வாளர் ஜோதி, மம்சாபுரம் கிராம நிர்வாக அலுவலர் வேல்ராஜ் மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர் ஜேசிபி இயந்திரம் கொண்டும் விவசாய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது சுமார் 19 சென்ட் அளவுக்கு நீர்நிலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக்கள அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'பளிச்' சருமத்துக்கு ஹைட்ரா பேஷியல்!

காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிற்சி!

கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

பிஞ்சுக் கைவண்ணம்

ஆட்டுக் குட்டி

SCROLL FOR NEXT