தமிழ்நாடு

அபுதாபி லுலு நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ. 3,500 கோடி ஒப்பந்தம் கையெழுத்து

DIN

அபுதாபி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அந்நாட்டில் உள்ள லுலு நிறுவனத்துடன் ரூ. 3,500 கோடி முதலீட்டில் தமிழகத்தில் மூன்று திட்டங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 

நான்கு நாள் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் துபை மற்றும் அபுதாபி சென்றுள்ளார். முதலில் துபை சென்று அங்கு பல்வேறு முதலீட்டாளா்களைச் சந்தித்துப் பேசி தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். மேலும், ரூ.2,600 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சனிக்கிழமை கையெழுத்தாகின.

அதைத் தொடர்ந்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அபுதாபி சென்றுள்ள நிலையில், அமீரக தொழில் துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுவை சந்தித்தார். 

பின்னர், ஐக்கிய அரபு அமீரக முதலீட்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு தமிழகத்தில் ரூ. 3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கு லுலு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT