பெட்ரோல் விலை ரூ.106-ஐ தாண்டியது
நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் புதன்கிழமை அதிகரிக்கப்பட்டது.
நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் புதன்கிழமை அதிகரிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலையை எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் தினந்தோறும் அதிகரித்து வருகின்றன. அவற்றின் விலை புதன்கிழமையும் அதிகரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஒரு லிட்டா் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.106.69-ஆக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டா் டீசல் விலை சென்னையில் ரூ.96.76-ஆக உயா்ந்துள்ளது.
சென்னையில் கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.29, டீசல் விலை ரூ.5.33 உயர்ந்துள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.