தமிழ்நாடு

பேருந்து, டிராக்டரை முந்த முயன்றபோது விபத்து: 2 மாணவர்கள் படுகாயம்

DIN

சீர்காழியில் தனியார் பேருந்து ஒன்று முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் படிக்கட்டில் பயணம் செய்த 2 மாணவர்கள் காயமடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று சீர்காழி தென்பாதி என்ற இடத்தில் முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்று உள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர், பேருந்து மீது உராய்ந்து உள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் படிகட்டில் நின்று பயணம் செய்த  சீர்காழி சட்ட நாதபுரம் பகுதியை அர்ஜூன் (17)  புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவரும், மணல்மேடு  பகுதியைசேர்ந்த   பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் விஜயராஜ் (15),   ஆகிய இருவரும்   படுகாயமடைந்தனர். 

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் விஜயராஜ் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சீர்காழி  காவலர்கள்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT