முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Updated On : 1 மே, 2022 at 3:39 PM
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் நாளை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மே, 3, 4, 5 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

அதிகபட்ச வெப்பநிலை:

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.