முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:08 AM
பகிர்:

தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு, அந்த நாட்டுக்கு தமிழகத்திலிருந்து உணவு, மருந்துகளை அனுப்புவதற்கு அனுமதிக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் இதற்கான தனித் தீா்மானத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இதைத்தொடர்ந்து இலங்கைக்கு அத்தியாவசியப் பொருள்களை அனுப்ப உரிய அனுமதிகளை வழங்கத் தேவையான அறிவுறுத்தல்களை வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டார். 

இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →