தமிழ்நாடு

மக்கள் பயன்பாட்டில் முக்கியமானது நெடுஞ்சாலைத் துறை: மு.க.ஸ்டாலின்

மக்கள் பயன்பாட்டில் நெடுஞ்சாலைத் துறை மிகவும் முக்கியமானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

மக்கள் பயன்பாட்டில் நெடுஞ்சாலைத் துறை மிகவும் முக்கியமானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நெடுஞ்சாலைத் துறை பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  தமிழ்நாட்டின்  உள்கட்டமைப்பு வசதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு முக்கியப் பங்கு உள்ளதாகக் கூறினார். 

மக்கள் பயன்பாட்டில் மிகவும் முக்கியமானது நெடுஞ்சாலைத் துறை. 1972ஆம் ஆண்டு கிராமங்களுக்கு இணைப்புச் சாலை அமைக்கும் திட்டம் திமுகவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கிராமங்கள் அனைத்துக்கும் இணைப்புச் சாலை அமைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி காலத்தில் அதிக மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அண்ணா மேம்பாலம் நாட்டின் சிறந்த மேம்பாலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழகத்தில் ஒரே வீச்சில் 1997ஆம் ஆண்டு 302 கோடி ரூபாயில் 106 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இவை அனைத்தும் 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டது இன்றும் ஆச்சரியமாக உள்ளது.

நெடுஞ்சாலைத் துறை பணியில் சுணக்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலைச் சூழ்ந்த மழை நீர்: பக்தர்கள் அவதி!

சிங்கப்பூரில் சாகச விளையாட்டில் ஈடுபட்ட பாடகர் மரணம்!

சென்னையில் தொடங்கியது மழை.. எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் பதில்

உத்தரகண்டில் மேலும் 5 உடல்கள் மீட்பு: பலி 7ஆக உயர்வு

ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட லஷ்கர்!

SCROLL FOR NEXT