தமிழ்நாடு

இலங்கைக்கு தமிழக அரசு உதவி: அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் நன்றி

DIN

இலங்கை மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 

கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழக அரசு உதவ மத்திய அரசு அனுமதிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதற்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கா், முதல்வா் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசு மூலமே இலங்கைக்கு உதவிகளை வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளாா். முன்னதாக தீர்மானம் தொடர்பாகவும் முதல்வர், அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். 

இதையடுத்து, இலங்கை மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக நன்றி தெரிவித்து அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

'இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தனிப்பட்ட முறையில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மனிதாபிமான செய்கை அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும் மற்றும்  நாடுகளுக்கு இடையே புரிதல் மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனைத்துத் துறைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT