தமிழ்நாடு

'தவறுதலாக உறுதிமொழி எடுத்த மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை'

மதுரை அரசு மருத்துவகல்லூரி சரக்‌ஷபத் உறுதிமொழி ஏற்பு விவகாரத்தில் தவறுதலாக உறுதிமொழி எடுத்த அனைத்து மருத்துவ கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்: நாராயணபாபு

DIN

மதுரை அரசு மருத்துவகல்லூரி சரக்‌ஷபத் உறுதிமொழி ஏற்பு விவகாரத்தில் தவறுதலாக உறுதிமொழி எடுத்த அனைத்து மருத்துவ கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

மதுரை மருத்துவ கல்லூரியில் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்லூரி இயக்குனர் நாராயண பாபு ரத்தினவேல், துணை முதல்வர் தனலட்சுமி, மாணவர் அமைப்பு தலைவர் ஜோதிஸ் குமாரவேல் உள்ளிட்டோரிடம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் செய்தியளர்களை சந்தித்த நாரயண பாபு பேசியபோது:

மாணவர்கள், துணை முதல்வர், முதல்வர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். விசாரணை குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். தவறுதலாக சமஸ்கிருத உறுதிமொழி எடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் தவறுதலாக பதிவிறக்கம் செய்துள்ளனர்.

தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பியது சுற்றறிக்கை மட்டுமே, உத்தரவு அல்ல. பிப்ரவரி 10 ஆம் தேதி சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கும், தேசிய மருத்துவ ஆணைய நடவடிக்கைகளை அப்படியே பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.

தவறுதலாக உறுதிமொழி எடுத்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உறுதிமொழி ஒத்திகை எடுக்கப்பட்ட போது பொறுப்பு முதல்வர் தனலெட்சுமி களத்தில் இல்லை என விசாரணையில் தெரிவித்து உள்ளார்.

விசாரணை அறிக்கை அடிப்படையில் முதல்வரை மீண்டும் நியமிப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

ஜெய்லர்- 2 படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடியும்: நடிகர் ரஜினி தகவல்

SCROLL FOR NEXT