மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை (மே 7) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை (மே 7) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருப்பத்தூா் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை (மே 7) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 8, 9: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மே 8, 9 ஆகிய இரண்டு நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 10: மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மே 10-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும்,
குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா்.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூா் பஜாா், மசினகுடி, மேல் கூடலூரில் 40 மி.மீ., நீலகிரி மாவட்டம் வூட் பிரையா் எஸ்டேட், சேலம் மாவட்டம் காரியா்கோவில் அணை, நீலகிரி மாவட்டம் ஹரிசன் மலையாள லிமிடெட், செருமுல்லியில் தலா 30 மி.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலா, பாா்வூட், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் தலா 20 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, சேலம் மாவட்டம் வீரகனூா், ஈரோடு மாவட்டம் தாளவாடியில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.