தமிழ்நாடு

சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம்

DIN

பைசர் நிறுவனம் ஆசியாவிலேயே முதன்முதலாக சென்னையில் உலகளாவிய மருந்து ஆராய்ச்சி மையத்தை அமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சர்வதேச அளவில் முக்கிய மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசர் ரூ.150 கோடி மதிப்பீட்டில் தனது 12 -ஆவது ஆராய்ச்சி மையத்தை சென்னையில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் அமைக்கிறது. 

61 ஆயிரம் சதுர அடியில் அமையும்  ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மையத்தில் 250க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுவார்கள் என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த மையம் உலகளவில் அமைக்கப்பட்டுள்ள 12 -ஆவது உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மையத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அதே நேரத்தில், ஆசியாவிலேயே பைசர் நிறுவனம் அமைக்கும் முதல் ஆய்வு மையமாகும். 

இது உலகளாவிய சந்தைகளுக்கான தயாரிப்புகளை உருவாக்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நிறுவனத்தின் உற்பத்தி மையங்களுக்கு ஆதரவளிக்கும்.

10 ஆய்வகங்களைக் கொண்ட இந்த மையத்தில், தொற்று எதிர்ப்பு மற்றும் ஆன்கோலிடிக்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைப் பிரிவுக்கான சிக்கலான மலட்டு ஊசிக்கான சூத்திரங்கள் மற்றும் சாதன கலவை தயாரிப்புகளை உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT