தஞ்சாவூர் அருகே துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட துரித உணவகத்தில் கால்நடை மருத்துவ மாணவர்களான பிரவீன்(22), பரிமலேஸ்வரன்(21), மணிகண்டன்(21) ஆகிய 3 பேரும் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் இவர்களுக்கு உணவு ஒவ்வாமையால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 ஆம் தேதி கேரளம் மாநிலம், காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் நகரில் உள்ள துரித உணவுக் கடை ஒன்றில் "கெட்டுப்போனா ஷவர்மா" சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்தார், மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.