மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்ற மக்கள். 
தமிழ்நாடு

மேலூர் அருகே மீன்பிடித் திருவிழா: ஆர்வத்துடன் பங்கேற்ற மக்கள்!

மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவையொட்டி ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டு பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை பிடித்துச் சென்றனர். 

DIN

மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவையொட்டி ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டு பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை பிடித்துச் சென்றனர். 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி பெரிய கண்மாயில் பாரம்பரிய முறைப்படி நடைபெறும் மீன்பிடித் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து மேலூர், திருவாதவூர், மாங்குளம், சிட்டம்பட்டி, வெள்ளரிபட்டி, தேற்குதெரு, மானிக்கம்பட்டி, என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, ஊத்தா, உள்ளிட்டவற்றைக் கொண்டு, கிராமப் பெரியவர்கள் அனுமதி அளிக்கும் முன்னரே கண்மாயில் இறங்கி மீன்களை பிடிக்கத் தொடங்கினர்.

இதில் கட்லா, ரோகு, விரால், சிலேபி என பல்வேறு வகையான நாட்டு மீன்கள் கிடைத்த நிலையில் அவற்றை ஆர்வமுடன் தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

மழை பொழிந்து, நீர்நிலைகள் பெருகி விவசாயம் செழிக்க வேண்டி பாரம்பரிய முறைப்படி நடைபெறும் இந்த மீன்பிடித் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

SCROLL FOR NEXT