முகப்பு
தமிழ்நாடு

கோபாலபுரத்தில் கருணாநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று கோபாலபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினார். 

Updated On : 7 மே, 2022 at 10:05 AM
கோப்புப்படம்
பகிர்:

திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று கோபாலபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினார். 

திமுக தலைவரும் மாநில முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி பதவியேற்றது. ஆளுநர் மாளிகையில்  நடைபெற்ற விழாவில், மு.க.ஸ்டாலின் முதல்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். 

தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவுற்று இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

Advertisement

இரண்டாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்றார். 

கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தன்னுடைய தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். 

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் உடனிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.