அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். 
தமிழ்நாடு

அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செயலி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

DIN

சென்னை: டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று  மனிதவள மேலாண்மைத்துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.

அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஒருங்கிணைந்த செல்லிடைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும். தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அமைச்சர் கூறினார்.

அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப்பணியாளர் குழுமம் ஆகியவை மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு இந்த செயலி மூலம் விண்ணப்பிக்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக ரூ. 111 கோடி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

ஒகேனக்கல் வனப்பகுதியில் மர்மமான முறையில் ஆண் சிறுத்தை பலி!

மண்ணும் மனிதர்களும்... அங்கோலா

ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல்! மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

4 நாள்களில் சவரனுக்கு ரூ. 3,120 உயர்வு.. புதிய உச்சத்தில் தொடரும் தங்கம்!

SCROLL FOR NEXT