சாந்தனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை  
தமிழ்நாடு

சாந்தனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை 

மத்திய சிறையில் உள்ள சாந்தனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வயதான நிலையில் அடையாளம் மாறி காணப்பட்டார் சாந்தன். 

DIN

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள சாந்தனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வயதான நிலையில் அடையாளம் மாறி காணப்பட்டார் சாந்தன். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான சாந்தன் (எ) சாந்தகுமார் (53) கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொரப்பாடியில் உள்ள வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். 

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வேலூர் மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சாந்தன் என்கிற சாந்தகுமாருக்கும் முழு உடல் பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது. 

இதற்காக தொரப்பாடியில் உள்ள வேலூர் மத்திய சிறையில் இருந்து அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சாந்தனுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஒரு மணி நேர பரிசோதனைக்குப் பிறகு மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

பல ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக சாந்தன் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். முதிர்வடைந்த நிலையில் முழுவதும் அடையாளம் காண முடியாத அளவுக்கு அவர் இருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெய்ஜிங்கில் புதின், கிம் ஜோங்-உன் பேச்சுவாா்த்தை

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

ஜோலாா்பேட்டை, கந்திலியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் அளிப்பு

திருமலையில் 64,935 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT