முகப்பு
தமிழ்நாடு

தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு: மத்திய அரசு எச்சரிக்கை

தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:13 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து பொதுமக்கள் நடத்தி வந்த போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளதால், நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகின்றது.

இதற்கிடையே, இலங்கையில் சிறைச்சாலையிலிருந்து கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது போராட்டக்காரர்கள் தாக்கியதில், அதிலிருந்த 58 சிறைக் கைதிகள் தப்பிச் சென்றனர்.

இந்நிலையில், தப்பிச் சென்ற சிறைக் கைதிகள் மற்றும் தேச விரோதிகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரை மாவட்டங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

தொடர்ந்து, ராமேஷ்வரம் உள்ளிட்ட கடற்பகுதிகளில் கடலோரக் காவல்படையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →