முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார் வெங்கையா நாயுடு

சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வரும் 28ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
கோப்புப் படம்.
பகிர்:

சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வரும் 28ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. 

தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 26ஆம் தேதி உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும். மேலும் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை நிறுவப்படும். 

அண்ணா மற்றும் பெரியார் சிலைகளுக்கு நடுவே கருணாநிதி சிலை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வரும் 28ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இதனை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →