தமிழ்நாடு

2,500 புதிய பேருந்துகள் வாங்க திட்டம்: அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

DIN

பெரம்பலூர்:  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 2,000 புதிய பேருந்துகளும், 500 பேட்டரி பொருத்திய பேருந்துகளும் வாங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரியலூர்- வேப்பூர், அகரம் சிகூர்- குன்னம் ஆகிய வழித்தடங்களில் பேருந்துகளை திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

இதையும் படிக்க.. குழந்தையைக் கொன்ற சிறுவன் கைது; விசாரித்த காவலர்களுக்கு பேரதிர்ச்சி

14-ஆவது ஊதியக் குழு பேச்சுவார்த்தை கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போது, முதல்வர் தலைமையில் அந்தக் கூட்டம் நடைபெற்றது. வருகிற மழைக்காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் பேருந்துகள் சீரமைக்கப்படும்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைவாகவே உள்ளது. கேரளா - தமிழ்நாடு செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் அந்தப் பேருந்துகளில் மட்டுமே பேருந்துக் கட்டணம் உயர்வு குறித்து அலுவலர்கள் அறிக்கை அளித்துள்ளனர்.

போக்குவரத்துத் துறை ரூ. 48,500 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை சீரழிக்கப்பட்டது. அதுகுறித்து, துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

பேருந்துகளில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், 2,000 புதிய பேருந்துகளும், 500 பேட்டரியால் இயங்கும் பேருந்துகளும் ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட உள்ளது என்றார் அமைச்சர் எஸ்.எஸ். சிவங்கர்.

முன்னதாக, புதிய வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்,  மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சி. ராஜேந்திரன் மற்றும் பொதுமக்களுடன் பயணித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகை அணையிலிருந்து இன்று தண்ணீா் திறப்பு

ஆய்க்குடி பேரூராட்சி வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ. 20.30 நிதி ஒதுக்க அமைச்சரிடம் கோரிக்கை

தூத்துக்குடி மட்டக்கடை சுற்றுவட்டாரங்களில் இன்று மின்தடை

பிளே-ஆஃப் நம்பிக்கையில் பெங்களூரு: பஞ்சாபை வெளியேற்றியது

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 9-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT