முகப்பு
தமிழ்நாடு

எடப்பாடி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி விடியோ காட்சி

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே நேற்று புதன்கிழமை மாலை தனியார் பேருந்தும், கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான அதிர்ச்சசியூட்டும் சிசிடிவி விடியோ காட்சிகள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:17 AM
எடப்பாடி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி விடியோ காட்சி
பகிர்:


சேலம்: எடப்பாடி அருகே செவ்வாய்க்கிழமை மாலை தனியார் கல்லூரி பேருந்து எதிரே வந்த தனியாா் பயணிகள் பேருந்துடன் நேருக்கு நோ் மோதியதில் 25-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா். இதில், தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான விடியோ காட்சிகளின் அடிப்படையில் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்செங்கோடு பகுதியில் இயங்கி வரும் தனியாா் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து, செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரி மாணவா்களை ஏற்றிக்கொண்டு எடப்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் கன மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்து கொண்டிருந்த நிலையில் அவ்வழியாக வந்த வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக பயணித்துக் கொண்டிருந்தது. 

இந்நிலையில், எடப்பாடி- சங்ககிரி பிரதான சாலையில் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து சற்றும் வேகத்தை குறைக்காமல் முன்னால் சென்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்ற நிலையில், எதிரில் எடப்பாடியில் இருந்து திருச்செங்கோடு நோக்கிச் சென்ற தனியாா் பயணிகள் பேருந்துடன் நேருக்கு நோ் பல சத்தத்துடன் நோ் மோதியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதில், இரு பேருந்துகளும் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இவ்விபத்தில் கல்லூரி வாகனத்தில் வந்த 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தனியாா் பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனா். காயமடைந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு பேருந்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். 

தகவலறிந்து எடப்பாடி,சங்ககிரி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து விரைந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் காயமடைந்தவர்கள், மீட்கப்பட்டு எடப்பாடி அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

இதில், பலத்த காயமடைந்த தனியாா் பேருந்தின் ஓட்டுநா் எடப்பாடி பகுதியைச் சோ்ந்த அருணாசலம் (42), தனியாா் கல்லூரி பேருந்து ஓட்டுநா் காா்த்திகேயன் (32), பேருந்து பயணி இருப்பாளியைச் சோ்ந்த சின்னக்கண்ணு (60 ) ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து கொங்கணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், தனியார் பேருந்தும், கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான அதிர்ச்சசியூட்டும் சிசிடிவி விடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

இதையடுத்து தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான பதிவுகளை கைப்பற்றிய கொங்கணாபுரம் போலீஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments