தமிழ்நாடு

சிதம்பரம்: காவல்துறை பாதுகாப்புடன் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபாடு

DIN

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் தொன்றுதொட்டு இருக்கும் நடைமுறைப்படி, பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்ட நிலையில், காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்கள் கனகசபை மீதேறி வழிபாடு செய்தனர்.

சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கனகசபை மீதேறி பக்தர்கள் நடராஜரை வழிபட்டதால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படி, பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்ட நிலையில், காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்கள் கனகசபை மீதேறி வழிபாடு செய்தனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு கனகசபை மீதேறி பக்தர்கள் நடராஜரை வழிபட்டதால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயிலில் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கிகுகிறது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இங்கு மூலவரே உற்சவராக எழுந்தருளியிருப்பது மிகுந்த சிறப்புடையதாகும்.

நடராஜர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர இரகசியத்தை தரிசிப்பதும் இந்த கோயிலின் வழிபாட்டில் முக்கிய நடைமுறையாக இருந்து வந்தது. 

ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி, இங்கு கனக சபைக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டது.

தற்போது கரோனா பரவல் குறைந்திருப்பதால், மற்ற கோயில்களில் வழக்கமான நடைமுறைகள் பின்பற்றத் தொடங்கியருந்தாலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டும் கனகசபைக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தனர். இது பல நிகழ்வுகளில் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இது குறித்து கோயிலை நிர்வகிக்கும் தீட்சிதர்கள் கூறுகையில், கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியதாகவும் கூறப்பட்டது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலின் கனகசபை மீது ஏறி, பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணையும் பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, இன்று மாலை முதல் சிதம்பரம் நடராஜர் கோயிலில், காவல்துறை பாதுகாப்புடன் ஏராளமான பக்தர்கள் கனகசபை மீதேறி நடராஜரையும் சிதம்பர ரகசியத்தையும் தரிசித்தனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு கனகசபை மீதேறி நடராஜரை தரிசித்த பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT