கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஐந்து நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

தமிழகத்தில் ஐந்து நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், 

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக, 

20.05.22, 21.05.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

22.05.22, 23.05.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

24.05.22: உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை: 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ)

பெருஞ்சாணி அணை, சிவலோகம், புத்தன் அணை, சிவலோகம் தலா 4, சூரளகோடு, பேச்சிப்பாறை, சிற்றாறு தலா 3, சோலையார், அவலாஞ்சி, பாபநாசம், சின்னக்கல்லார், சின்கோனா தலா 2, தேக்கடி, தென்காசி, பெரியார், பூதப்பாண்டி, தக்கலை, வால்பாறை தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

20.05.22, 21.05.22: மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதி, தமிழக கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பலத்தகாற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பை: 6ஆவது முறையாக இந்தியா சாம்பியன்

பல வழிகளில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி

உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 80% உயர் சாதியினர்! மாநிலங்களவையில் தகவல்!

டி20 உலகக் கோப்பையின் சாதனை நாயகன் விராட் கோலி!

தாய் கிழவி வாரா பாடல்!

SCROLL FOR NEXT