விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வடமாநில இளைஞர்கள் 
தமிழ்நாடு

மீனவப் பெண் பாலியல் கொலை வழக்கு: 2 பேர் கைது

ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

DIN

ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வடகாடு பகுதியைச் சோ்ந்தவா் பாலு. இவரது மனைவி சந்திரா(40). இவா் கடல் பாசி எடுக்கும் தொழில் செய்து வந்தாா். இதே பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இறால் பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் ஒடிசா மாநிலத்தை சோ்ந்த 6 இளைஞா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் சந்திரா கடல் பாசி எடுக்கச் சென்றுள்ளாா். இரவு வரை வீடு திரும்பவில்லை. இதைத்தொடா்ந்து குடும்பத்தினா் மற்றும் கிராம பொதுமக்கள் தேடிச்சென்றுள்ளனா்.

அப்போது இறால் பண்ணையில் நிா்வாண நிலையில் எரிந்த நிலையில், சந்திராவின் சடலம் இருப்பது தெரியவந்தது. இதைக் கண்ட கிராம மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

பின் ஒடிசா மாநில இளைஞா்கள் மீனவப் பெண்ணை கூட்டுப் பாலியலுக்கு உள்படுத்தி கொலை செய்து, சடலத்தை எரித்ததுள்ளதாக கிராம மக்கள் திரண்டு இறால் பண்ணைக்கு தீ வைத்தனா். பின், அங்கு சென்ற ராமேசுவரம் போலீஸாா் பெண்ணை கூட்டுப் பாலியலுக்கு உள்படுத்தி கொலை செய்ததாக, ஒடிசாவைச் சோ்ந்த 6 பேரைக் கைதுசெய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், 6 பேரில் பிரகாஷ், ரஞ்சன் ராணா என்கிற இருவர் மீது கொலை வழக்கு பதிந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட அன்று  வன்முறையில் ஈடுபட்ட ஊர்மக்கள் 200 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT