முகப்பு
தமிழ்நாடு

ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது: பக்தர்கள் அச்சம்

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் 10 நாளாக கடல் உள்வாங்கி இருப்பதால் புனித நீராட வரும் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

Updated On : 29 மே, 2022 at 10:36 AM
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் 100 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருப்பதால் புனித நீராட வரும் பக்தர்கள் அச்சம்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:53 PM

ராமேசுவரம்:  ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் 100 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருப்பதால் புனித நீராட வரும் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

கோடை விடுமுறை நாள்களை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு ஞாயிற்றுகிழமை அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். 

அக்னி தீா்த்தக் கடலில் நீராடி விட்டு ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி விட்டு, நீண்ட வரிசையில் நின்று சுவாமி, அம்பாளை தரிசனம் செய்வர். 

Advertisement

இந்நிலையில், ராமேசுவரத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் 100 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்படுவதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

கடல் உள்வாங்கியுள்ளதால் ராமேசுவரம் கடலுக்கு அடியில் உள்ள பவளப்பறைகள், சாமிசிலைகள் வெளியே தெரிகிறது. 

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.