தமிழ்நாடு

2 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இயக்கம்: மக்கள் மகிழ்ச்சி

DIN

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்பட்டதையடுத்து பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரோனா காலத்தில் ராமேஸ்வரம் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டதையடுத்து அதனை மீண்டும் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதையடுத்து மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. 

காலை மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் மாலை ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கும் இரு மார்க்கத்திலும்  தினம் ஒருமுறை இயக்கப்படுகிறது. 

மதுரை கிழக்கு ,சிலைமான், திருப்புவனம் ,திருப்பாச்சேத்தி, ராஜகம்பீரம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை 6 :35 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டது. நீண்ட நாள்களுக்குப் பிறகு இயக்கப்படும் இந்த ரயிலில் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT