படம்: டிவிட்டர்/அன்பில் மகேஷ் 
தமிழ்நாடு

உதயநிதியை அமைச்சராக்க அன்பில் மகேஷ் தலைமையில் தீர்மானம்

திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

DIN

திருச்சி தெற்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டம், திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சரும், திருச்சி  தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ்  பொய்யாமொழி  தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், ஜூன் 3-ஆம் தேதி  கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது எனவும், சட்டப்பேரவை உறுப்பினரும் மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் 2 நாள்கள் சுற்று பயணமாக திருச்சி வரும் நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் திட்டமா எனப் பேச்சு எழுந்தது.

இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன்,  செந்தில் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள்,  ஒன்றிய பெருந்தலைவர்கள், கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்பும் நன்றியும்... மம்மூட்டி பகிர்ந்த பதிவு!

அதிமுகவில் பதவியை ராஜிநாமா செய்கிறேன்: முன்னாள் எம்.பி. சத்தியபாமா

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

மரக்கடையில் திடீர் தீவிபத்து! தேக்கு மரங்கள் எரிந்து நாசம்! | Vaniyambadi

செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

SCROLL FOR NEXT