முகப்பு
தமிழ்நாடு

உயர்கல்வியில் தமிழகப் பெண்களின் நிலை!: மு.க.ஸ்டாலின் கருத்து

உயர்கல்வியில் தமிழகப் பெண்களின் நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:


உயர்கல்வியில் தமிழகப் பெண்களின் நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது, பெண்களின் உயர்கல்வியில் தமிழ்நாடு இன்று அடைந்திருக்கும் உயரம் என்பது அரசால் மட்டும் நிகழ்ந்த சாதனை அல்ல. 

மயிலாடுதுறை ரமணி போன்ற தன்னலங்கருதாத பலகோடித் தாய்மார்களின்
உழைப்போடு நிகழ்த்தப்பட்ட கூட்டுச்சாதனை. வாழ்த்துகள் மருத்துவர்
விஜயலட்சுமி என்று பதிவிட்டுள்ளார். 

மயிலாடுதுறையில் ரமணி என்பவர் மீன் சந்தையில் மீன்களை சுத்தம் செய்ததன் மூலம் கிடைத்த வருவாய் மூலம் தனது மகளை ரஷியாவில் படிக்க வைத்து மருத்துவராக்கியுள்ளார். அவரது அகள் விஜயலட்சுமி தற்போது மருத்துவராகியுள்ளார். ரமணிக்கும், அவரது மகள் விஜயலட்சுமிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  

முழு கட்டுரையைப் படிக்க →