தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை: தலைமைச் செயலகம் நோக்கி பாஜகவினர் பேரணி

DIN

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. மாநில அரசுகளும் உள்ளூர் வரியைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது.

ஆனால், மத்திய அரசு இதுவரை பலமுறை உயர்த்திவிட்டு தற்போது அதில் 50% மட்டும் குறைத்துவிட்டு மாநிலங்களைக் குறைக்கச் சொன்னால் எப்படி செய்ய முடியும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத தமிழக அரசைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜகவினர் மாபெரும் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT