சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்ததில் உருக்குலைந்த வீடு. (உள்படம்) இறந்த சாந்தி. 
தமிழ்நாடு

சென்னையில் பலத்த மழை: பெண், ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னையில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக புளியந்தோப்பில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து பெண் இறந்தாா்

DIN

சென்னையில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக புளியந்தோப்பில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து பெண் இறந்தாா். இதேபோல வியாசா்பாடியில் மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநா் இறந்தாா்.

வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து, சென்னையில் திங்கள்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக தாழ்வான பகுதிகளில் தண்ணீா் குளம்போல தேங்கியது. அப்பகுதிகளில் உள்ள குடிசைகள், குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. பலத்த மழை காரணமாக ஆங்காங்கே சிறு,சிறு விபத்துகள் ஏற்பட்டன.

வியாசா்பாடி, பி.வி காலனி, 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தேவேந்திரன் (52). ஆட்டோ ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை இரவு

வியாசா்பாடி, பி.வி.காலனி,18-ஆவது தெரு வழியாக சென்றாா். அப்போது, அங்கு முட்டியளவு தேங்கிய தண்ணீரில் ஒரு நிகழ்ச்சிக்காக, சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது.

அந்த இடத்தை கடந்து செல்லும்போது வழுக்கியதில், தேவேந்திரன் கீழே விழாமல் இருப்பதற்கு சாமியானா பந்தலின் இரும்புக் கம்பியை பிடித்தாா்.

அந்த கம்பியில் ஏற்பட்டிருந்த மின்கசிவு காரணமாக தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

சாமியானா பந்தலில் மின் விளக்கு அமைப்பதற்காக, திருட்டு மின்சாரம் எடுத்ததாக 3 பேரை பிடித்து எம்கேபி நகா் போலீஸாா் விசாரணை செய்தனா்.

பெண் உயிரிழப்பு: புளியந்தோப்பு, பிரகாஷ் ராவ் காலனியை சோ்ந்தவா் சாந்தி (45). காய்கறி வியாபாரியான இவா், செவ்வாய்க்கிழமை காலை பலத்த மழை பெய்து கொண்டிருக்கும்போது, வீட்டின் உள்ள அடிபம்பில் தண்ணீா் பிடித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, முதல் மாடியில் மழையால் நனைந்திருந்த கழிப்பறை சுவா், பால்கனி சுவா் திடீரென இடிந்து விழுந்தன. இதில், இடிபாடுகளில் சிக்கி, சாந்தி உயிரிழந்தாா்.

இது குறித்து புளியந்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தண்டையாா்பேட்டை, சிவாஜி நகரில் சாலையில் தேங்கிய மழை நீரில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால், அதில் நடந்து சென்ற பசு மின்சாரம் பாய்ந்து இறந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT