தமிழ்நாடு

19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

DIN

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழக பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மேலும், இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னை, புதுச்சேரியில் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில பகுதியில் நவ.6 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாளை 14 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 6 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெளிநாடு சென்ற நடிகர் விஜய்!

50 தொகுதிகளில்கூட காங்கிரஸ் வெற்றி பெறாது:மோடி பேச்சு

ஆந்திரம்: மினி வேனிலிருந்து சாலையில் சிதறிய ரூ.7 கோடி பறிமுதல்

ஒய்.எஸ்.ஆர். நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை!

ஜான்வியின் சூப்பர் ஹீரோ யார் தெரியுமா?

SCROLL FOR NEXT