தமிழ்நாடு

'மரியாதை நிமித்தமானது': சந்திப்புக்குப் பின் ஸ்டாலின் - மம்தா பானர்ஜி பேட்டி!

இரண்டு நாள்கள் பயணமாக சென்னை வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

DIN

இரண்டு நாள்கள் பயணமாக சென்னை வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

மேற்கு வங்க இல.கணேசனின் அண்ணன் கோபாலனின் 80வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக அவர் சென்னைக்கு வருகை புரிந்துள்ளார்.

இதனிடையே சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருகை புரிந்தார். அவரை மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்திப்புக்குப் பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், "இரு அரசியல் தலைவர்களும் சந்திக்கும்போது மாநிலங்களின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை விவாதிப்பது வழக்கம்தான். தேர்தல் தொடர்பாக எதையும் விவாதிக்கவில்லை. மேற்கு வங்கத்திற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதை நான் ஏற்றுக் கொண்டேன்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதயநிதிக்கே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் பொருள் சரியாகத் தெரியவில்லை: தமிழிசை

அக்டோபரில் உச்சம் தொட்ட கார்கள் விற்பனை!

மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் பலி

எங்களிடம் அது இல்லையா? மாரி செல்வராஜைக் கேள்விகேட்ட நடிகை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்ப்பது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

SCROLL FOR NEXT