தமிழ்நாடு

44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம்

DIN

44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், அருமனை, நாங்குநேரி ஆகிய இடங்களில்  ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தலாம். 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ்.  காத்திருக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளாக இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்து இருந்தது.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி தராத 47 இடங்களில் உளவுத்துறை அறிக்கைக்கு பின் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. 

இந்நிலையில், 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT