கோப்புப்படம் 
தமிழ்நாடு

2028-க்குள் பரந்தூர் விமான நிலையம் அமைக்க இலக்கு: தமிழக அரசு

பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

DIN

பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என தமிழக அரசு  அறிக்கை அளித்துள்ளது. 

24 ஆண்டுகளாக 2-வது விமான நிலையம் குறித்து பேசப்பட்டாலும் தற்போதுதான் அதற்கான அமைவிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது. 

தொழில் நுட்ப ரீதியில் விமான நிலையில் அமைய சாத்தியமான இடங்களில் ஒன்றாக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எதிர்கால மக்கள் தொகை பெருக்கம், தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. விமான நிலையம் அமைக்க முதலீடு செய்யும் ரூ.100-க்கு, வருமானமாக ரூ.325 தமிழகத்திற்கு வருமானமாகக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவதை முன்னிட்டு அதுவரை சென்னை மெட்ரோ வழித்தடம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிக்கையில் கூறியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT