தமிழ்நாடு

மழை வெள்ளத்தால் சூழப்பட்ட வயல்வெளிகளில் வேளாண் இயக்குநர், ஆட்சியர் நேரில் ஆய்வு!

DIN


மழை வெள்ளத்தால் சூழப்பட்ட வயல்வெளிகளில் தமிழக வேளாண் துறை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் ஆய்வு செய்தனர். 20,000 ஏக்கரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதியில் அதிகபட்சமாக 22 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதன் காரணமாக கொள்ளிடம் சீர்காழி உள்ளிட்ட  தாழ்வான பகுதிகளில் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மூன்று நாள்களுக்கு மேலாக தண்ணீரில் மூழ்கியுள்ள சம்பா இளம் பயிர்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள வேட்டங்குடி ஆரப்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக வேளாண் துறை இயக்குநர் அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 

வயல்வெளிகளில் தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை வெளியே எடுத்து அதிகாரிகளுக்கு காண்பித்து இந்த பயிர்கள் மீண்டும் பிழைப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் லலிதா, இதுவரை வரை சுமார் எட்டாயிரம் ஹெக்டேர், அதாவது 19,760 ஏக்கர் பரப்பளவு சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று தெரிவித்தார். தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் விவசாயிகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT