அமைச்சர் பொன்முடி 
தமிழ்நாடு

சொத்துக்குவிப்பு வழக்கு: வேலூர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்!

சொத்துக்குவிப்பு வழக்கில் வேலூர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி இன்று ஆஜரானார்.

DIN

சொத்துக்குவிப்பு வழக்கில் வேலூர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி இன்று ஆஜரானார்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்குதொடர்பாக தன் மனைவி விசாலட்சுமியுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆஜரானார்.

பொன்முடி மற்றும் அவர் மனைவி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது அமைச்சரானதால் இந்த வழக்கு வேலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 

இதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி. தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து அமைச்சரும் அவரது மனைவியும் புறப்பட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT