முகப்பு
தமிழ்நாடு

சந்திர கிரகணம்: திருப்பதி கோயில் நாளை(நவ. 8) 11 மணி நேரம் மூடல்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோயில் நாளை(செவ்வாய்க்கிழமை)  11 மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:46 AM
திருப்பதி ஏழுமலையான் கோயில்
பகிர்:

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோயில் நாளை(செவ்வாய்க்கிழமை)  11 மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை (நவ.8) முழு நேர சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 11 மணி நேரம் திருப்பதி கோயில் நடை மூடப்படுவதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த நேரத்தில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கமான விஐபி தரிசனம், ரூ.300 கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகக் கூறியுள்ளது. 

கிரகணம் முடிந்ததும் வழக்கம்போல இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது நிகழும் சந்திர கிரகணத்தின்போது சந்திரன் செந்நிறத்தில் காட்சி அளிக்கும். 

இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி, 5.12 மணி வரை இருக்கும். பின்னா், பகுதி அளவு சந்திரகிரகணம் 6.19 மணியளவிலும் முடிவடைகிறது.

நாகாலாந்தின் கோஹிமாவில் மட்டுமே சந்திர கிரகணத்தின் உச்சநிலையை மாலை 4.29 மணியளவில் காணலாம். தமிழகத்தில் சென்னையில், மாலை 5.39 மணியளவில் சந்திர கிரகணத்தைக் காண இயலும்.

இதையும் படிக்க | நாளை முழு சந்திர கிரகணம்

முழு கட்டுரையைப் படிக்க →