தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய வங்கக் கடல் பகுதியில் நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வலுபெற்று வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 9 ஆம் தேதி ஒரு சில இடங்களிலும், 10ஆம் தேதி அநேக இடங்களிலும், 11, 12, 13ஆம் தேதி பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக் கூடும் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 10 மணிவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

SCROLL FOR NEXT