முகப்பு
தமிழ்நாடு

கோவையில் நைட்டியுடன் திமுக பெண் கவுன்சிலரின் அடாவடி: வைரலாகும் விடியோ!

கோவையில் தொழில் அதிபர் வீட்டிற்கு முன்பு சாலை ஒரத்தில் வைத்திருந்த மரங்களை நைட்டியுடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் பிடுங்கி எரிந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:49 AM
சாலையில் உள்ள சிறிய மரத்தை பிடுங்கி வீசும் திமுக கவுன்சிலர் மாலதி
பகிர்:

கோவையில் தொழில் அதிபர் வீட்டிற்கு முன்பு சாலை ஒரத்தில் வைத்திருந்த மரங்களை நைட்டியுடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் அடாவடியாக பிடுங்கி எரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியில் வசிப்பவர் தொழில் அதிபர் சுபாஷ். இவர் வீட்டிற்கு முன்பு சாலை ஒரத்தில் மரங்களை நட்டு வைத்துள்ளார்.

இந்த மரங்களை சாலையில் வைக்கக் கூடாது எனக்கூறி கோவை மாநகராட்சி 34 ஆவது வார்டு கவுன்சிலர் மற்றும் கல்வி குழு தலைவருமான மாலதி, சுபாஷிடம் தெரிவித்துள்ளார். இதில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுபாஷ் வீட்டிற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த சிறிய மரத்தை மாலதி அடாவடியாக பிடுங்கி எரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →