விபத்தில் இறந்த கல்லூரி மாணவி மீனாசுந்தரி 
தமிழ்நாடு

கந்தர்வகோட்டை அருகே கல்லூரி மாணவி மீது டிராக்டர் மோதி பலி!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவி மீது டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

DIN

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவி மீது டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள முதுகுளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகள் மீனாசுந்தரி (22), இவர் தஞ்சாவூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

கல்லூரி மாணவி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிய சோளம் ஏற்றி வந்த டிராக்டர்

வழக்கம்போல் இவர் திங்கள்கிழமை காலை இவரது அண்ணன் கனகராஜ் (24, உடன் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிலிருந்து முதுகுளம் சாலையில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தபோது வீரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான சோளம் ஏற்றி வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து மீனாசுந்தரி சம்பவ இடத்திலேயே பலியானார்.

படுகாயமடைந்த அவரது அண்ணன் கனகராஜை அருகிலிருந்தவர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT